Breaking News

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பேசிய மம்மி !!!

25 ஆண்டுகளுக்கு முன் ஆல்ப்ஸ் மலையில் உள்ள டைசென்ஜாக் சிகரத்திற்கு சுற்றுலா சென்ற ஜெர்மன்வாசிகள் ஊட்லஸ் என்ற இடத்தில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதனின் உடலை கண்டுபிடித்தனர்.

பனிமலையில் கிடந்ததால் அந்த உடல் 90 சதவீதம் அப்படியே இருந்துள்ளது. ஊட்லஸ் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் விஞ்ஞானிகள் அதற்கு ஊட்சி என பெயரிட்டனர். இந்த உடல் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். கம்ப்யூட்டர் மூலம் ஊட்சியின் முழு உருவத்தை வடிவமைத்து மெழுகுசிலையை உருவா’கி உள்ளனர்.

மேலும் ஸ்கேனிங் மூலம் ஊட்சியின் குரல்வளை மற்றும் குரல் தடப்பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் மூலம் எப்படி ஊட்சியின் குரல் ஒலித்திருக்கும் என ஆடியோவினை வெளியிட்டுள்ளனர். அந்த மம்மியின் குரல் தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதை போன்றே உள்ளது.

இதனை டிஸ்கவரி சேனலின் தொல்லியல் துறை பொறுப்பாளரான ரோசல்லா ரோரன்சி யூடியூப்பில் வெளியிட்டு உள்ளார்.