Breaking News

ஓரினச்சேர்கையாளர்களுக்கு 30 மில்லியன் யூரோ இழப்பீடு !!!

ஜெர்மனி நாட்டில் கடந்த 1871ம் ஆண்டில் இருந்து ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது.

எந்தவித குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுப்படாமல் இருந்ததும் கூட ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற ஒரே காரணத்தினால் அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இதனால் மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த சுமார் 1,40,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 50,000க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனால் இவ்வாறு சட்டவிரோதமாக சிறையில் அடைக்கபட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 30 மில்லியன் யூரோவுக்கும் மேலாக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.