Breaking News

அவுஸ்திலியாவை “வைட் வாஷ்” செய்த முதல் அணி என்ற சாதனையை படைக்கும் தென் ஆப்ரிக்கா !!

அவுஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றி அவுஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற பெருமையை அடையும் நோக்கில் தென் ஆப்ரிக்கா அணி இன்று  கடைசி ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலியா அணி தென் ஆப்ரிக்காவுடன் முதலில் 5 ஒருநாள் போட்டிகள் கொன்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் 4 போட்டிகளில்  அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று அவுஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றால் ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலியா அணியை  “ஒயிட் வாஷ்” செய்த முதல் அணி என்ற பெருமை தென் ஆப்ரிக்கா அடையும்.

தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தென் ஆப்ரிக்காவும் ஆறுதல் வெற்றியாவது பெற்றாக வேண்டும் என்ற நிலையில் அஸ்திரேலியா அணியும் இன்றைய போட்டியில் விளையாட உள்ளதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.