Breaking News

125 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழனால் கண்டுபிடிக்கப்பட்ட கீபோர்டு !

125 ஆண்டுகளுக்கு முன்னர் கிராம மக்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் தீர்க்க மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கோமாரிக்கல் அல்லது சன்னசிக்கல்

என குறிப்பிடப்படும் கல்வெட்டுகளை வைத்து கோவில் பூஜாரிகளும் சந்நியாசிகளும் சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர்.

இந்த கல்வெட்டுகள் தமிழகத்தில், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இப்போதும் காணப்படுகிறது.

துக்கியாம்பாளையம் பாக்கியராஜ் குடும்பத்தினர் வழிவழியாக பாதுகாத்து வழிபட்டு வரும் மாந்திரீக மரப்பலகை அபூர்வமான ஒன்றாகும்.

மூன்றடி நீளத்தில் அரையடி அகலத்தில் காணப்படும் இந்த மரப்பலகையில், கோமாரிக்கல்வெட்டை போல ஆன்மீக சக்கரமும், தமிழ் எண்ணும், எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த மரப்பலகையை பார்க்கும் போது தற்கால கம்யூட்டர் கீபோர்டு போல காணப்படுகிறது. இது தமிழன் கண்டுபிடிப்பு…