Breaking News

சமூக வலைதளங்களில் ஷேர் பண்ணவேண்டாம் !!!

ராணுவ தகவல்களை, ராணுவம் தொடர்பான டாங்கிகள் மற்றும் அதிநவீன ஆயுதங்களின் படங்களை சமூக வலைதளங்களில் பகிராதீர்கள் என்று இந்திய ராணுவம் குடிமக்களுக்கு எழுத்து மற்றும் ஆடியோ வடிவில் எச்சரிக்கை அனுப்பியுள்ளது.

அதுமட்டுமன்றி, ராணுவவீரர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும், ஆயுதங்களை கைகளில் வைத்துக்கொண்டு, டாங்கிகள் அருகில் நின்றுகொண்டு போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.