Breaking News

லண்டன் மக்களை திரும்பி பார்க்க வைத்த 2 மாத அதிசய குழந்தை!!

லண்டனில் கடந்த 9 வாரங்களுக்கு முன் பிறந்தான் ஜுனியர் காக்ஸ் நூன். பிறக்கும் போதே தலைநிறைய முடி. இதன்மூலம் அந்த பகுதி மூலம் பிரபலம் அடைந்தான் காக்ஸ்.

போதா குறையாக வீட்டிலேயே அவனுக்கு ஹீட்டர் மூலம் bouffant ஹேர் ஸ்டைல் கொண்டு வந்தார் அவரது தாயார். இதனால் இந்த குழந்தையின் புகழ் மேலும் அதிகரித்துள்ளது.

வாரந்தோறும் சூப்பர் மார்க்கெட்டிற்கு குழந்தையை தூக்கிச் செல்லும் போது, அத்தனை தலைகளும் குழந்தையை நோக்கி திரும்பி விடுகிறதாம். 40 நிமிடம் தான் சூப்பர் மார்க்கெட்டிற்கு போய்வர  செலவாகுமாம்.

ஆனால் இந்த குழந்தையை தூக்கிச் செல்வதால் அனைவரும் தன்னை நிறுத்தி குழந்தைக்கு ஒரு ஹலோ சொல்லி விட்டுச் செல்கின்றனராம்.  இதனால் போய்வர 2 மணி நேரம் செலவாகிறதாம்.