Breaking News

உலகின் முதல் டெங்கு தடுப்பூசி பிரான்சில் தயாரிப்பு !!

உலகின் முதல்முறையாக, டெங்கு நோய்க்கான தடுப்பூசியை பிரான்ஸ் தயாரித்துள்ளது. இதன் பயன்பாட்டுக்கு, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

இலங்கை  உட்பட வளரும் நாடுகளை அச்சுறுத்தும் நோயாக, டெங்கு பரவிவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் டெங்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது அதன் பரவலை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் சிக்கலை சந்திக்கின்றன.

இந்நிலையில், பிரான்சை நாட்டை சேர்ந்த சனோஃபி என்ற நிறுவனம், டெங்கு நோய்க்கான முதல் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதனை சோதனை முறையில் பயன்படுத்துவதற்கு, இந்தோனேஷியா, தாய்லாந்து, மெக்சிகோ, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், பிரேசில், கோஸ்டா ரிகோ, பராகுவே, பெரு உள்ளிட்ட 14 நாடுகள் தற்போது அனுமதி வழங்கியுள்ளன.

விரைவில், உலகம் முழுவதும் இது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.