Breaking News

ஹாலோவின் விழாவின் தோற்றமும்..! ஆடை அலங்காரமும்..!!

ஹாலோவின் திருவிழாவின் போது இந்த உலகிற்கும், மறு உலகத்திற்குமான இடைவெளி மெலிந்து போவதாய் பழைய செல்ட் இனத்தவர் நம்பினர்.

ஹாலோவின் அன்று தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு மரியாதை செய்வதோடு தீங்கு செய்யும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர்.

தீய ஆவிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக ஆவிகள் போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் ஹாலோவின் தினத்தில் அணிந்து கொள்கின்றனர்.

இந்த கொண்டாட்டத்தின் போது ஒரு சிறிய தீயை எழுப்பி அதனுள் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் இடப்படுகின்றன.

மேலும், இந்த நாளில் சிறுவர்கள் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் சென்று ,பரிசு தருகிறீர்களா இல்லை தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பார்கள். அதற்கு வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பரிசோ அல்லது பணமோ கொடுத்து அனுப்புவார்கள்.

மேலும் பெரியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் பேய்கள், சூனியக்காரிகள், பிசாசுகள் அல்லது நவீன உலகத்துக்கு ஏற்றவாறு மாறு வேடம் அணிந்து விருந்துகளில் கலந்து கொள்வார்கள்.