Breaking News

மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு, பாடசாலைகளினது ஓழுக்காற்றுக் குழு ஆசிரியர்களுடனான விஷேட கலந்துரையாடல்.!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மட்டக்களப்பு பிராந்திய சிவில் குழுவுடன் இணைந்து பாடசாலைகளிலுள்ள ஒழுக்காற்றுக் குழுவினருடனான கலந்துரையாடல் ஒன்றினை 25.10.2016 இன்று ஆணைக்குழு காரியாலயத்தில் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் நடாத்தியது.

இக்லந்துரையாடலின் போது ஆசிரியர்கள் மாணவர்களது ஒழுக்க விடயங்களில் தலையிடுகின்ற போது அவர்களுக்கு சட்டப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களது ஒழுக்க விழுமியங்களை பாதுகாக்கும் வகையில் ஆசிரியர்கள் உடலியல் ரீதியான தண்டனைகளை வழங்காது மாற்று நடைமுறைகளை கையாள வேண்டும் எனவும், மாணவர்களுக்கு குற்றமும் தண்டனையும் என்ற வகையில் ஆணைக்குழு  கருத்தரங்குகளைச் செய்வதெனவும், பெற்றோர்களுக்கு பிள்ளைக்கான பொறுப்புக்கள் பற்றியும் விழிப்புணர்வுகளைச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)