Breaking News

களத்தில் குதித்தது கூகிள் கதிகலங்கிய ஆப்பிள் மற்றும் சாம்சுங் ஸ்மார்ட் போன் வரிசையில் புதிய புரட்சி கூகிள் பிக்சல்.

அனைவரும் பயண் படுத்தகூடிய  மிகவும் உபயோகமான பல்வேறு சேவைகளை இணையத்தில் வழங்கி வரும் கூகுளின் மற்றுமொரு புதிய புரட்சிதான்  கூகிள் பிக்சல். இன்றைய தினம் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

கூகுள் நிறுவனம் மோடோரோலா மற்றும் நெக்சஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முயற்சியாக பிக்சல் போன்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது Pixel (5" display) மற்றும் Pixel XL (5.5" display). ஐபோன் மற்றும் கேலக்ஸி எஸ் வகைகளுக்கு போட்டியாக சந்தையில் இந்த போன்களை களமிறக்கியுள்ளது.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் : அண்ட்ராய்ட் 7.1 நக்கஸ்ட்ஸ் (Nougat)
கேமரா : பின்புற கேமரா 12.3 மெகாபிக்சல், முன் கேமரா 8 மெகாபிக்சல்
ஹெட் செட் : 3.5 mm ஜெக் 
புளூ டூத் : வெர்சன் 4.2 புளூடூத் வசதி 
பிராஸசர் : குவாட் கோர் 2.15Ghz ஜிகா கெட்ஸ்/ 1.6Ghz ஜிகோ கெட்ஸ் 64 பிட் 
ரம்: 4 ஜி.பி ரம்
பிங்கர் பிரிண்ட் சென்சார்
கலர் : வெரி சில்வர், குவிக் பிளாக், ரியலி புளூ ஆகிய 3 கலர்கள்

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இன்று முதல் கூகுள் பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸல் போன் விற்பனைக்கு வருகிறது.

2,770 அல்லது 3,450 mah பேட்டரிகள் இந்த போனில் உள்ளது. மேலும் விரைவாக சார்ஜ் ஏறும் டெக்னிக் பயன்படுத்தப்படுவதால் 15 நிமிடம் சார்ஜ் ஏற்றினாலே 7 மணி நேரம் வரை சார்ஜ் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதன் அறிமுக விலை 
Pixel (5" display) : 32 GB $649.00 அமெரிக்கா டாலர்கள், 128 GB $749.00 அமெரிக்கா டாலர்கள்.
Pixel XL (5.5" display) : 32 GB $769.00 அமெரிக்கா டாலர்கள், 128 GB $869.00 அமெரிக்கா டாலர்கள்.