Breaking News

கவர்ச்சி நாயகி கிம் காதர்ஷியான் துப்பாக்கி முனையில் விலை உயர்ந்த நகைகள் கொள்ளை..!!

அமெரிக்காவில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர் நடிகை கிம் கர்தாஷியன். அவ்வப்போது அவரது உடல் அழகு தெரியும் வகையில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடக்கும் ஃபேஷன் ஷோவை காண சென்றிருந்தார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில் துப்பாக்கி முனையில் அவரை சிறைப்பிடித்த திருடர்கள் அவரிடம் இருந்து ரூ.74 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

தனது விலை உயர்ந்த நிச்சயதார்த்த மோதிரம் உட்பட துப்பாக்கி முனையில் நகைகளை பறிகொடுத்த கிம் உடனடியாக தனி விமான மூலம் பாரீஸில் இருந்து கிளம்பி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டாராம்.