Breaking News

ஒக்ஸ்போர்ட்டிலும் ‘ஐயோ’

உலகப் புகழ்பெற்றதும் 150 வருட வரலாற்றை கொண்டதுமான ஒக்ஸ்போர்ட் அகராதியானது தமிழில் அதிகம்   பயன்படுத்தும் ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ எனும் இரு சொற்களையும் புதிதாகச் சேர்த்துக்கொண்டுள்ளது. ஆங்கில அர்த்தங்களுக்கென தன்னகத்தே சுமார் 6 இலட்சம் வார்த்தைகளை கொண்டுள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கமாகும். இதன்படி ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு சொற்களைக் கடந்த செப்டெம்பர் மாதம், புதிதாகச் சேர்த்துள்ளது இதற்கமைவாக ‘ஐயா’ என்பது ஒருவரை மரியாதையுடன் அழைக்கவும், ‘ஐயோ’ என்பது ஆச்சரியம் மற்றும் துக்கமென்பதைக் குறிக்கவுமென குறிப்பிடப்பட்டுள்ளது.