Breaking News

பொது விளம்பர பலகையில் ஆபாசப்படம் !!

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் மின் விளம்பர பலகையொன்றில் திடீரென்று ஆபாச பட வீடியோ ஒளிபரப்பான சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஜகார்த்தாவில் அதிக வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் வீதியின் ஓரத்தில் மின் விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தன்று மாலை நேரம் பொதுவாக கூட்ட நெரிசம் மிகுந்த அந்த வீதியில் திடீரென்று அந்த விளம்பர பலகையில் ஆபாச படமொன்று ஒளிபரப்பானது. அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்களை அதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

குறித்த வீடியோ 5 நிமிடங்கள் ஓடிய அந்த திரைப்பட காட்சிகள் வாகனங்களில் இருந்த பெண்களை முகம் சுழிக்கும்படி வைத்துள்ளது. இதனிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் குறிப்பிட்ட விளம்பர பலகையின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது குறும்பாக எவரும் இத்தகைய காட்சிகளை ஓடவிட்டார்களா என தகவல்கள் இல்லை. ஆனால் கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட ஆபாச காட்சிகள் ஒளிபரப்பான மின் விளம்பர பலகையானது நகர மேயரின் அலுவலகம் அருகே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதை இளைஞர் ஒருவர் தனது ஸ்மார்ட் போனின் செயலியை பயன்படுத்தி குறிப்பிட்ட காட்சிகள் கொண்ட அந்த திரைப்படம் எது என்று கண்டு பிடித்து தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.

 அந்த பேஸ்புக் பதிவும் குறிப்பிட்ட செய்தியும் தற்போது மக்கள் மத்தியில் மிக விரைவாக பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.