Breaking News

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக லண்டனிலிருந்து மருத்துவர் வரவழைப்பு !!!

லண்டனின் செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் மற்றும் வலி தொடர்பான சேவை, அறுவை சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய சேவை பிரிவின் இயக்குனராகப் பணியாற்றி வரும் ரிச்சர்ட் பியெல்தான், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

ரிச்சர்ட் சிகிச்சையளித்ததை முதலில் மீடியாக்கள் வெளிப்படுத்தின. அதன்பிறகு அப்பல்லோ தனது அறிக்கையிலும், ரிச்சர்ட் சிகிச்சை அளித்து வருவதை உறுதி செய்தது.

ஜெயலலிதாவுக்கு ரிச்சர்ட் என்ன மாதிரியான சிகிச்சையளிக்கிறார் என்பதை அப்பல்லோ மருத்துவமனை வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும், உலகின் தலை சிறந்த அவசர கால சிகிச்சை நிபுணர்களில் ரிச்சர்ட்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.