மன உளைச்சலோடு உடற்பயிற்சி செய்யலாமா ?!!
கோபமாகவோ அல்லது கவலையாகவோ இருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா? அப்படி செய்வதால் என்ன நேரும் என 52 நாடுகளில் 12,000 க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், கோபம் மன உளைச்சலோடு பயிற்சி செய்பவர்களுக்கு அடுத்த 1 மணிநேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதனால், ஆரோக்கியமற்ற மனநிலை மாறும் வரை, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது என கூறுகின்றனர். அப்படி செய்பவருக்கு அந்த மனநிலையை மும்மடங்கு அதிகப்படுத்தும் அளவிலே உடலின் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுகிறது என கூறுகின்றனர்.
புகை, மதுப்பழக்கம் போல, உடற்பயிற்சிக்கு உளைச்சல் மனநிலையும் பொருந்தாது என கூறும் இந்த கண்டுபிடிப்புகள் அமெரிக்கன் இருதய சங்க இதழில் (American Heart Association Journal) குறிப்பிடப்பட்டுள்ளது.