Breaking News

கார்ட்டூனை வகைப்படுத்தி குழந்தைகளின் வீட்டுபாடம் முடிக்க எளிய வழி !!

நம்ம வீட்டு குழந்தைகள், பள்ளியில் கொடுக்கும் வீட்டு பாடங்களை சரியாக முடிக்காமல் மறுநாள் பள்ளிக்கு சென்று ஆரிரியர்களிடம் திட்டு வாங்குவார்கள்.

அப்படிப்பட்ட பிரச்சனையில் இருந்து அவர்கள் விடுவிக்க சில எளிய வழிகளை பார்ப்போமா..?

20 நிமிடங்களுக்கு ஒரு முறை குழந்தைகளின் கவனம் சிதறும். வீட்டுப்பாடம் செய்யும் போது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு ஒய்வு கொடுக்கவேண்டும்.

அந்த நேரத்தில் வீடியோ கேம்ஸ், டி.வி.,பார்க்க அனுமதிக்க கூடாது.

வீட்டு பாடம் எழுதத்தொடங்கும் போது ஒரு பாடத்துக்கு இவ்வளவு நேரம் என்று நேரம் ஒதுக்கி அவர்களை முடித்து விட்டால் அவர்களுக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.

அப்படி செய்வதன் மூலம் அவர்கள் நேரத்தில் முக்கியத்துவம் தெரிந்து கொள்வர்.

குழந்தைகளுக்கு கொடுத்துள்ள வீட்டுப்பாடத்தை அட்டவணைப்படுத்துங்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் கார்ட்டூன் கேரக்டரில் ஒரு கார்டு தயாரித்து அதில் எழுதுங்கள்.

கார்ட்டூன் வரும் டோரா, சோட்டா பீம் என வகைப்படுத்தி ஒன்று முடிந்தது அடுத்ததை துவங்குங்க என உச்சாகப்படுத்துங்கள்.  இது குழந்தைகளுக்கு நல்ல மாற்றத்தை ஏற்ப்படுத்தும்.

குழந்தைகள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப பாடங்கள், செய்முறையுடன் கூடிய வீடியோக்களாக இணையத்தில் கிடைக்கிறது.

வீட்டுப் பாடத்துக்கு ஏற்ற வீடியோவைப் பார்க்க செய்து, வீட்டுப் பாட நோட்டில் கூடுதலாக சில தகவல்களை எழுத செய்யலாம். அதை அடுத்தநாள் ஆசிரியர் பார்த்து பாராட்டும்போது

அடுத்தடுத்த நாட்களில் வீட்டுப் பாடத்தை உற்சாகமாக எழுதுவார்கள். ஆர்வத்துடன் எழுதும்போது அவர்களின் கையெழுத்தும், மெருகேறும்

உங்கள் பிள்ளையை, டியூசனில் வீட்டுப்பாடம் செய்ய அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்யும்போது பாடங்கள் புரியாமல் இருந்தால் மற்றவர்களைப் பார்த்து காப்பி அடிக்க ஆரம்பித்து விடுவர்.

இதனால் அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு தாங்களே சுயமாக வீட்டுப் பாடம் செய்யவேண்டும் என்ற எண்ணம் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் மனது அடிக்கடி மாற்றத்துக்கு உட்படக் கூடியது. அறிவியல் பாடம் எழுதிக்கொண்டிருக்கும்போதே, தமிழ் வீட்டுப் பாடம் செய்கிறேன் ப்ளீஸ் எனக் கேட்பார்கள்.

அப்படி கேட்கும்போது அவர்களுக்கு எதில் விருப்பம் ஏற்படுகிறதோ அதை செய்யட்டும் என்று விட்டுவிடுங்கள். இல்லையெனில் விருப்பம் இல்லாமல் தப்பும் தவறுமாக செய்து நேரத்தை தான் வீணடிப்பர்.

ஆனால் திரும்பவும் அறிவியல் பாடத்தையும் எழுத வைக்க மறக்காதீர்கள்.

குழந்தைகளுக்கு என்ன வீட்டுப்பாடம் கொடுத்தார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அதனைச் சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை இன்டர்நெட்டில் தேடுங்கள். அப்போது கிடைக்கும் தகவல்களை அதற்குரிய படங்களோடு, சார்ட் பேப்பரில் ஒட்டுங்கள்.

அதில் நூலைக் கட்டி, ஜன்னலில் தொங்க விடுங்கள். ஆனால் அதன்பின்புறம் தெரிவதுபோல தொங்க விடுங்கள்.

உங்கள் குழந்தையிடம் நீ விரைவராக வீட்டுப்பாடம் எழுதிவிட்டால், அதோடு தொடர்புடைய இந்தச் செய்தியைக் காட்டுவேன் எனச் சொல்லுங்கள்.

அது என்ன செய்தி எனும் ஆவலில் விரைவாக மட்டுமல்ல மகிழ்ச்சியோடும் வீட்டுப் பாடத்தை செய்வார்கள்.