Breaking News

இந்திய வங்கிக்கு சென்றால் கையில் மை வைக்கப்படும்!

வங்கிகளில் மக்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க, ஒரே நபர் திரும்ப திரும்ப பணம் எடுக்க வருவதை தடுக்க புதிய உத்தி ஒன்றை கடைபிடிக்க உள்ளது வங்கிகள். இனி வங்கி கவுண்டர்களில் பணம் எடுக்க வருபவர்களின் கையில் மை வைக்கப்படும் என மத்திய நிதித்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

மேலும் பலர் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை, பலரிடம் கொடுத்து வங்கிகள் மூலம் வெள்ளைப் பணமாக மாற்ற முயற்சி எடுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இனி வங்கிகளில் பணம் எடுக்க வருபவர்களின் கைகளில் பெருவிரலில் மை வைக்கப்படும் என கூறினார்.

இதனால் ஒரே நபர் பல வங்கிகளில் பணம் எடுப்பது தடுக்கப்படும். இந்த திட்டம் இன்று முதல் பெருநகரங்களில் துவங்கப்படும் என தெரிவித்த சக்தி காந்த தாஸ், பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.