இங்கிலாந்தில் முதியவர்களிடம் காமவெறியைக் காட்டிய இந்திய பெண்ணுக்கு தண்டனை அதிகரிப்பு.
இங்கிலாந்தில் முதியோர் இல்லத்தில் 3 வயதானவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிக்கிய 25 வயது இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியான டேவனில் உள்ள முதியோர் காப்பகத்தில் பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டினா சேத்தி(25). அவர் அந்த இல்லத்தில் இருந்த 101 வயது பெண், மற்றும் ஒரு மூதாட்டி, ஒரு தாத்தா என மூன்று பேருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
அந்த தாத்தாவின் மர்ம உறுப்பை தொட்டு தடவி சில்மிஷம் செய்துள்ளார். வயதான பாட்டிகளின் மர்ம உறுப்புகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவர் என்ன செய்கிறார் என்று கூட தெரியாமல் அந்த முதியவர்கள் இருந்துள்ளனர். காரணம் அவர்கள் அனைவரும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள். கிறிஸ்டினா தனது வக்கிர செயலை செல்போனில் வீடியோ எடுத்து தனது காதலருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கிறிஸ்டினாவை கைது செய்தனர். இந்த வழக்கில் கிறிஸ்டினாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஹாலெட் கிறிஸ்டினாவின் தண்டனையை 15 ஆண்டுகளாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.