Breaking News

சமுர்த்தி வேலைத்திட்டத்தினை புதிய வடிவமைப்பிலும் பலம்வாய்ந்ததாகவும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களை இனங்காண்பதற்கான ஆய்வுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

வறுமையை ஒழிக்கும் முதன்மை வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கையினை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு கருத்திட்டங்களைச் செயற்படுத்தி இதுவரையில் 20 வருடங்கள் மட்டளவிலான காலங்கள் கடந்துள்ளன. இந்த சமுர்த்தி வேலைத்திட்டத்தினை புதிய வடிவமைப்பிலும் பலம்வாய்ந்ததாகவும் செயற்படுத்துவதற்கு விஷேட பல வேலைத்திட்டங்களை தற்போது சமூக வலுவூட்டல்கள் மற்றும் நலனோம்புகை அமைச்சு ஆரம்பித்துள்ளது.  

மக்களிடமிருந்தும் பல்வேறு பிரிவினரிடமிருந்தும் மெற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு சமுர்த்தி நிவாரணம் கிடைக்காத, இருப்பினும் சமுர்த்தி நிவாரணம் கிடைக் வேண்டிய குடும்பங்களை இனங்கண்டு அக்குடும்பங்களை சமுர்த்தி வேலைத்திட்டத்தோடு பங்களிப்புச் செய்து கொண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு சமூக வலுவூட்டல்கள் மற்றும் நலனோம்புகை அமைச்சு தீர்மானித்துள்ளது.  

அதன் பிரகாரம் தற்போது சமுர்த்தி நிவாரணம் கிடைக்காத இருப்பினும், குறைந்த வருமானம் பெறும் குழுவுக்குச் சொந்தமான குடும்பங்களை இனங்காண்பதற்கான ஆய்வு ஒன்றினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நீங்களும் சமுர்த்தி நிவாரணம் பெற வேண்டிய குடும்பம் என எண்ணுவதாயின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 24.11.2015 இற்கு முன்னர் பிரதேச செயராளர்/வாழ்வின் எழுச்சிப் பிரிவின் தலைமையக முகாமையாளரிடம் ஒப்படைக்குமாறு கோரப்படுகின்றீர்கள்.
எம்.ஐ.அப்துல் நஸார்