கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட 63 வயதான 4 பிள்ளைகளின் தந்தை ரயில் விபத்தில் பலி.
கிளிநொச்சி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ரயிலுடன் மோதி இடம் பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த 63 வயதான நிக்கிலஸ் ஸ்ரிபன் எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில், பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே இவ்வாறு ரயிலுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றமை இங்கு குறிப்பிட தக்கது.