Breaking News

ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் 6வது பேராளர் மாநாடு உள்ளிட்ட பிராந்திய முழு நேர ஊடகவியலாளர்களின் தேசிய மாநாட்டில்ஜனாதிபதி பிரதம அதிதி

ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30-11-2016 புதன்கிழமை கொழும்பு-07 மாகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெறவுள்ள ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் 6வது பேராளர் மாநாடு,பிராந்திய முழு நேர ஊடகவியலாளர்களின் தேசிய மாநாடு,தகவல் அறியும் உரிமை பற்றிய கொழும்புக் கருத்தரங்கு போன்ற நிகழ்வுகளில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளதோடு கௌரவ அதிதிகளாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க,ஊடக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான,அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலங்சூரிய ஆகிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஊடகத்துறையில் முழுநேர ஈடுபாடு கொண்ட பிராந்திய ஊடகவியலாளர்களின் தொழில் பிரச்சினைகளைப் பற்றி இம் மாநாட்டில் அடிப்படைக் கவனம் செலுத்துவதும் எமது முக்கிய குறிக்கோளாகும் என ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மசிறி லங்காபேலி தெரிவித்தார்.

இம் மாநாடுகள் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 

இலங்கையின் 9 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட ஏனைய மாகாணங்களைச் சார்ந்த, முழுநேர தொழில்சார் ஊடகவியலாளர்கள் சுமார் 250 பேர் பங்குபற்றும் பாதயாத்திரையுடன் இம்மாநாடு ஆரம்பமாகும் 
பாதயாத்திரை காலை 08.00 மணிக்கு விகார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்படும் எனவும் 

ஊடகக் கைத்தொழிலை, பொதுமக்களின்; சேவைக்குரிய ஊடகக் கைத்தொழிலாக மாற்றம் செய்தல், முறைசார் ஊடகத்துறை பயிற்சியை வழங்குதல், குறிப்பாக பிராந்திய ஊடகவியலாளருக்கு நிரந்தரச் சம்பளம், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்துவம்உட்பட ஊடகவியலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக உத்தேச முன்மொழிவுகள் அடங்கிய யோசனைகள் ஓர் விஞ்ஞாபனமாக அதிமேதகு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும். 

வடமாகாணம்கிழக்கு மாகாணம், தென்மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம், மேல் மாகாணம் ஆகிய 9 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், மாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கத்தின் பதாதையின் கீழ் ஊடகவியலாளர்கள் பாதயாத்திரையில் பயணிப்பார்கள். 

லேக் ஹவுஸ் ஊழியர் சங்கம் மற்றும் ஏனைய ஊடக அமைப்புக்கள்,உட்பட பிரதான நீரோட்டத்தின் ஒருசில தொழிற்சங்கத்தலைவர்களும் பாதயாத்திரைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

தகவல்களை அறியும் உரிமைபற்றிய கருத்தரங்கின் வளவாளராக சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி, கலாநிதி மஹீம் மெண்டிஸ்ஆகியோர் பங்குபற்றுவார்கள். 

தகவல்களை அறியும் உரிமைபற்றிய கருத்தரங்கை நடாத்துவதற்கு, பங்களிப்புச் செய்யும் ஐ.டப்ளியு.பி.ஆர். நிறுவனம் உதவி வழங்குகிறது. மேற்படி நிறுவனத்துடன் பணியாற்றும் ஒரு சில சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இம் மாநாட்டிலும், கருத்தரங்கிலும் பங்குபற்றுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)