Breaking News

மக்களை வியக்க வைக்கும் மக்களுக்கான ‘பட்ஜட்’ காத்திருக்கிறது!!

எதிர்வரும் 10ம் திகதி 2017ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை வியக்கத்தக்க வகையில் மக்களுக்கான பட்ஜட் காத்திருக்கிறது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இம்முறை முதற்தடவையாக வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்படுவதற்கு முன்பதாக பொது மக்களிடமும் நிபுணர்களிடமும் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும் மக்கள் வியக்கும் வகையில் மக்களுக்கு நன்மை தரக்கூடிய சிறப்பான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்படுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்