Breaking News

காதலியுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய விராட் கோஹ்லி, தொடரும் காதல்...!!

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருப்பர் விராட் கோஹ்லி. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுபவர். இவர் சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் மற்றும் 2 அரை சதங்கள் எடுத்து அசத்தினார். இந்த தொடரை விராட் கோஹ்லி காரணமாக இருந்தவர்.

விராட் கோஹ்லி பிரபல பாலிவுட நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு இடங்களில் வலம் வருகின்றனர். மேலும் அவ்வப்போது இருவரும் பிரிந்து விட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் கோவாவில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளார். விசாகப்பட்டிணத்தில் நடந்த கடைசி ஒருநாள் போட்டி முடிந்த பிறகு கோஹ்லி கோவா சென்றார். அதே போல காதலி அனுஷ்கா சர்மாவும் அங்கு வந்தார்.

கோவாவில் இருவரும் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அதோடு கோவாவில் கடந்த 30ம் தேதி இரவு டெல்லி கோவா அணிகள் மோதிய இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியை இருவரும் ஒன்றாக ரசித்தனர். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்றான கோவா எப்.சி அணியின் உரிமையாளர்களில் ஒருவராக விராட் கோஹ்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது