Breaking News

தாய்லாந்தின் புதிய மன்னராக மகா வஜிர லாங்கோர்ன் பதவி ஏற்பு !

தாய்லாந்து மன்னராக இருந்த பூமியால் அதுலய தேஷ் (88), கடந்த மாதம் (அக்டோபர்) 13-ந்தேதி மரணம் அடைந்தார். கிட்டதட்ட 70 ஆண்டுகளாக மன்னராக இருந்தார் இவர், உலகின் நீண்ட நாள் மன்னர் ஆக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து தாய்லாந்தின் புதிய மன்னர் யார் என்ற கேள்வி எழுந்ததால், பலவித யூகங்கள் கிளப்பப்பட்டன.

இந்நிலையில் புதிய மன்னராக பட்டத்து இளவரசர் மகா வஜிர லாங்கோர்ன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த மன்னர் பூமிபால் அதுலய தேசின் மகன் ஆவார்.

64 வயதாகும் இவர் வரும் டிசம்பர் 1-ந்தேதி புதிய மன்னர் ஆக பதவி ஏற்க உள்ள நிலையில், தற்போதே இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.