Breaking News

அமெரிக்க வருங்கால ஜனாதிபதி பாகிஸ்தானில் பிறந்தவரா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இவர் வருகிற ஜனவரி மாதம் அடுத்த அதிபர் ஆகிறார். இவர் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கியவர்.

இந்த நிலையில், அவர் பாகிஸ்தானில் பிறந்தவர் என்ற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் ‘நியோ நியூஸ்’ செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ‘டிரம்ப் 1954-ம் ஆண்டு வசிரிஸ்தானில் பிறந்தார். அவரது உண்மையான பெயர் தாவூத் இப்ராகிம் கான். இவரது பெற்றோர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதால் அவர் அனாதையானார்.

அதை தொடர்ந்து இங்கிலாந்துவாழ் இந்திய ராணுவ தளபதி அவரை லண்டனுக்கு அழைத்து சென்றார். அங்கு அமெரிக்காவை சேர்ந்த டிரம்ப் குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். அதை தொடர்ந்து அவர் டொனால்டு டிரம்ப் ஆனார் என கதை விட்டுள்ளது.

மேலும், அவரது குழந்தைபருவ போட்டோவையும் வெளியிட்டது. தற்போது அந்த செய்தி படத்துடன் பாகிஸ்தானில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.