Breaking News

டிசம்பர் 31 முதல் 'வாட்ஸ் ஆப்’ இக்கு மூடுவிழா காணும் மொபைல்கள் !!

மொபைல் போனில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து வருவது ‘வாட்ஸ் ஆப்’ இதன் மூலம் பலரும் தகவல்களை பறிமாறி கொள்கின்றனர்.

அந்த சேவைக்கு டிசம்பர் 31 தேதியுடன் மூடுவிழா காணவுள்ளது சில வகை போன்கள்.

ஓ.எஸ்., எனப்படும் சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம்.  இந்த இணைய தளம் மூலம் பல போன்கள் இயங்கிவருகிறது.

இந்த இணையதளம் 2014ம் ஆண்டு முதல் இயக்கத்தில் இல்லை.

இந்த வகை போன்களும் மேலும் சில வகை போன்களில் வரும் டிசம்பர் 31க்கு மேல் வாட்ஸ் ஆப் சேவை கிடைக்காது.

இதனை வாட்ஸ்ஆப் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் சில வகை ஸ்மார்ட் போன்களிலும் வாட்ஸ் ஆப் சேவை கிடைக்காது.

வாட்ஸ் ஆப் சேவை துண்டிக்கப்படும் போன் வகைகள்:

சிம்பியான் பயன்படுத்தப்படும் மொபைல் போன்கள், பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கியா எஸ்60,

ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2 பயன்படுத்தப்படும் போன்கள், வின்டோஸ் போன் 7.1

ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ் மற்றும் ஐஓஎஸ் 6 பயன்படுத்தப்படும் ஐபோன்களில் ‘வாட்ஸ் ஆப்’ சேவை கிடைக்காது.