Breaking News

உக்காத பொருட்களை கொள்வனவு செய்யும்போது பிடிகாசு வைப்பீடு முறை !!

நாட்டில் கழிவு முகாமைத்துவத்தை நடைமுறைச்சாத்தியமாக்க புதிய முறைமையை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வருடமொன்றிற்கு நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனது மொத்தத்தொகையில் கிட்டத்தட்ட 60%மானவை (210,000 மெற்றிக்தொன்) சூழலுடன் சேர்க்கப்படுகின்றது. இதனால் சூழலுக்கு ஏற்படுத்தப்படும் தீங்கினை குறைக்கும் நோக்கோடு,  சூழலை மாசுப்படுத்துபவரே அதற்கான நட்டஈட்டினையும் செலுத்தவேண்டும் என்ற எண்ணக்கருவினை நடைமுறைப் படுத்துவதற்கு யோனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் ஒருதொகை பணத்தை, உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நுகர்வோரிடமிருந்து தற்காலிகமாக அறவிட்டபப்படல் வேண்டும், குறித்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் மீதப்படுகின்ற, இயற்கையாகவே உக்காத பொதிகள் மற்றும் கழிவுகளை மீளவும் கையளிக்கும் போது, தற்காலிகமாக அறவிடப்பட்ட  பணத்தொகை மீளவும் நுகர்வேருக்கு வழங்கப்படும்.

இதற்கமைய கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் நீண்ட காலத்துக்கு பயன்படுத்தப்படும் இலத்திரனியல் மற்றும் தொழிற்நுட்ப பொருட்கள் ஆகியவற்றுக்காக வசூலிக்கப்படும் தொகைக்கமைவாக அதற்கான வட்டியை வருடாந்தம் நுகர்வோருக்கு வழங்கப்படுவதற்கும் ஜோசனை முவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.