Breaking News

திருமணமாகாத இளம் பெண்கள் கருக் கலைப்பு செய்யலாம்…!!!

இந்தியாவில் திருமணம் ஆகாத பெண்கள் கருக் கலைப்பு செய்யலாம் என்று சுகாதார அமைச்சகம் அதிரடி பாிந்துரையை மத்திய அரசுக்கு செய்துள்ளது. இந்த பாிந்துரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாத இளம் பெண்கள் கருக்கலைப்பு செய்து  கொள்வது சட்ட விரோதம் என்று சட்டம் உள்ளது.

திருமணமான பெண்கள்  கருத்தடை மருந்துகள் சாப்பிட்ட போது கரு கலையாத பட்சத்தில் கருக்கலைப்பு செய்து  கொள்ள சட்டம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.

கருக்கலைப்பு தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் புதிய பாிந்துரை ஒன்றை அரசுக்கு அனுப்பியுள்ளது.

திருமணமான பெண்களாக இருந்தாலும் சாி, திருமணமாகாத பெண்களாக இருந்தாலும் சாி அவா்கள் எடுத்துக் கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் தோல்வியடையும் சமயத்தில் இந்த அனுமதியை அளிக்கலாம்.

கருக்கலைப்பு மருத்துவம் தொடா்பான சட்டத்தில் திருத்தம்  செய்ய சுகாதார அமைச்சகம் விரும்புகிறது.

பல தரப்பினாின் ஆலோசனைக்கு பிறகுதான் மத்திய சுகாதார அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாம்.

பயிற்சி இல்லாதவா்கள் செய்யும் கருக்கலைப்பால் பெண்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. போதிய பயிற்சி பெற்ற ஹோமியோபதி மருத்துவா்கள், பாரம்பாிய மருத்துவமுறை செவிலியா்கள், மருத்துவ தாதியா் ஆகியோா் ஆயுதம் இன்றி  கருக்கலைப்பு செய்துக் கொள்வதற்கு அனுமதிக்கலாம் என்றும் பாிந்துரை செய்ய உள்ளது.

இது போன்ற சட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவையும், நாடாளுமன்றமும் தனது ஒப்புதலை அளிக்க வேண்டும். சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி அளித்த பின்பு சுகாதார அமைச்சகம் விாிவாக விளக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தொிவிக்கிறது.

இந்த தகவல் பெரும் அதிர்ச்சியையும், இளம் பெண்கள் சிலாிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது.