Breaking News

ஒருநாளைக்கு 24 மணித்தியாலம் கிடையாது… 25 மணித்தியாலம்… அதிர்ச்சி அளிக்கும் ஆய்வுத்தகவல்!!!

பூமி அதன் சுற்றுப்பாதை, விண்வெளி, சுற்றுச்சூழல் தொடர்பாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது பூமி தன்னைத்தானே சுற்றி வர 24 மணி நேரமாகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு மில்லி நொடிகள் இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கணக்கின் அதன்அடிப்படையில் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் இது ஒரு மணிநேரமாக மாறும் என்று கருதப்படுகிறது. எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இது மிகவும் மெதுவான நிகழ்வாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.