Breaking News

இறக்கைகள் கொண்ட புதிய வகை மீன் வீடியோ !!!

கடலினுள் அரிய வகை உயிரினம் ஒன்று கடல் ஆராய்ச்சியாளரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது எந்த இனத்தை சேர்ந்த உயிரினம் என்பது அடையாளப்படுத்தப்படாத நிலையில், அது crinoid என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது.

இந்த அழகான உயிரினம் தாய்லாந்தின் பாலி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Crinoids என்ற உயிரினத்தை பவள பாறை வளரும் பகுதிகளில் காண்பது சாதாரண விஷயம் தான். ஆனால், அவை நீந்துவதை காண்பதென்பது மிகவும் ஒரு அரிதான விஷயமாகும்.

அவை பவளங்களுடன் அல்லது பாறைகளுடன் எப்போதும் இணைந்தே காணப்படும். பாதி பறவை, பாதி மீன் வடிவமைப்பை கொண்ட ஒரு கடல் உயிரினமாக இது கருதப்படுகின்றது.

இந்த உயிரினம் நீந்தும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.