Breaking News

விநாயகமூர்த்தி முரளிதரன் பிணையில் விடுதலை !

குண்டு துளைக்காத அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பின்  பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவால் கைதுசெய்யப்பட்ட கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், 10 இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீர பிணைகளில் அடிப்படையில் பிணையில் செல்ல  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளார்.

எனினும்  விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு வௌிநாட்டுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்  பிரதி ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் ஆஜராகுமாறும்  உத்தரவிட்ட நீதவான் அடுத்த வழக்கு விசாரணையானது 01.02.2017 அன்று நடைபெறும் எனவும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.