Breaking News

இந்து இளைஞர் மணிகண்ட மகர ஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவின் ஐயப்பன் மண்டல விசேட பூசைகள்

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட  இந்து  இளைஞர்  பேரவையின்    மணிகண்ட  மகர  ஜோதி   தீர்த்த யாத்திரைக்  குழுவின்   ஐயப்பன்  மண்டல  விசேட  பூசைகள்  மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது .


மகர ஜோதி தீர்த்த  யாத்திர குழுவின்  ஐயப்பன் மண்டல பூசைகள்   சிவஸ்ரீ        சிவயோக செல்வ சாம்பஸ்ரீ  சாம்பசிவம் குருக்கள் தலைமையில் மட்டக்களப்பு மாமாங்கம் திருத்தொண்டர் மண்டபத்தில்  நடைபெற்றது

இடம்பெற்ற  மணிகண்ட மகர ஜோதி தீர்த்த  யாத்திர குழுவின்  ஐயப்பன்   மண்டல  பூசையில் மட்டக்களப்பு கோயில்குளம் பிள்ளையார் ஆலய பிரதம  குருக்கள்  சிவஸ்ரீ  செ .கு . உதயகுமார்   குருக்களினால்   விசேட கணபதி ஹோம பூசைகள் நடத்தப்பட்டு  பிரதான கும்பம்  விநாயகருக்கு   அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஐயப்பன் பஜனாம்ர்தமும்  அதனை தொடர்ந்து   விநாயகர் விசேட தீபாராதனை   பூசைகளும்  இடம்பெற்றது . 

இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின்  மணிகண்ட மகர ஜோதி   ஐயப்பன் மண்டல பூசை  நிகழ்வில் பெருமளவான  பக்தர்கள்  கலந்து கொண்டனர் .