Breaking News

மாற்றுத்திரனாளின் உடல் உள திறன்களை வெளிப்படுத்து விழிப்புணர்வு ஊர்வலம்

 (லியோன்)


சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்  பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இதற்கு அமைய சர்வதேச  மாற்றுத்திரனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாவட்ட  சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் 19.12.2016 இன்று திங்கள்கிழமை  நடைபெற்றது.

மாற்றுத்திரனாளின் உடல் உள திறன்களை வெளிப்படுத்து முகமாகவும் 2017ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அறிக்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட  மாற்றுத்திரனாளிகளுக்கான எதிர்கால 17 இலக்குகள் தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திரனாளிகளின் அமைப்புக்களை ஒருங்கிணைத்து  19.12.2016 இன்று திங்கள்கிழமை  காலை  மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி  பிரதான கல்முனை வீதி வழியாக  மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தை வந்தடைந்து அதனை தொடர்ந்து மைதானத்தில்  பிரதான நிகழ்வுகள் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் . அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் பிரதம விருந்தனர்களாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ. தவராசா, மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன் மற்றும்  சமூக சேவை அமைப்புக்களின் நிர்வாகிகள் , சமூக சேவை உத்தியோகத்தர்கள் , அரச அதிகாரிகள் , அரச சார்பற்ற பிரதிநிதிகள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது  மாற்றுத்திரனாளின் உடல் உள திறன்களை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகங்களும், கலை நிகழ்வுகளும்  நடைபெற்றது