புலியை விஞ்சுமா? புலிகேசி -II
ரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி படங்களில் நாயகனாக நடித்த வடிவேலு, அந்த படங்கள் வெற்றி பெறாததால் சுராஜ் இயக்கியுள்ள கத்தி சண்டை படத்தில் மீண்டும் காமெடியனாக நடித்தார். இந்த படத்தில் விஷாலுக்கு இணையாக வடிவேலுவுக்கும் அதிகப்படியான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்திரமுகி-2வான சிவலிங்கா படத்திலும் வடிவேலுவுக்கு வெயிட்டான வேடம் கொடுத்துள்ளார் பி.வாசு. ரஜினி நடித்த சந்திரமுகியில் வெறும் காமெடி யனாக மட்டுமே நடித்த வடிவேலு, இந்த படத்தில் குணசித்ர வேடத்திலும் கலந்து நடித்துள்ளார். கதைப்படி அவர் படநாயகன் ராகவா லாரன்சுக்கு சித் தப்பா வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஆக, இரண்டு படங்களிலுமே முக்கிய வேடங்களில் நடித்துள்ள வடிவேலு, கத்திச்சண்டை படம் விரைவில் திரைக்கு வரயிருப்பதால் அந்த படத்தின் ரிசல் டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அந்த படம் வெற்றி பெற்று காமெடி மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கும் வடிவேலு, அதன்பிறகு சிம்பு தேவன் இயக்கும் இம்சை அரசன்-2 படத்தில் உற்சாகமாக நடிக்க உள்ளாராம். அதனால் வடிவேலுவைப்போலவே சிம்புதேவனும் கத்திச்சண்டை மெகா ஹிட்டாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார்.
புலிப்படம் தோல்வியை அடுத்து இப்படத்தின் மூலம் தனது பெயரை தாக்கவைத்து கொள்வாரா சிம்பு தேவன் என பார்க்கலாம்.