திருச்சி தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்தில் இதுவரை 22 பேர் பலி?
திருச்சியில் இருந்து சுமார் 100 கிமீ தூரத்தில் உள்ள துறையூர் என்ற பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள ஒரு பகுதியில் இன்று காலை 7 மணிக்கு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
முதல்கட்ட தகவலின்படி 10 பேர் பலியானதாகவும், அடுத்தகட்ட தகவலின்படி 22 பேர் பலியானதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மீட்புப்பணிகள் முழுவதும் முடிந்த பின்னரே பலி எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல் தெரியவரும்
இந்த பகுதியில் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் மீட்புப்பணி தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலையில் இருந்து கற்கள் வெடித்து சிதறுவதால் இதன் அருகே பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொழிற்சாலையின் உள்ளே சுமார் 50 தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர்களது நிலை குறித்து உறவினர்கள் கவலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.