Breaking News

இலங்கை சிறுபான்மை மக்களின் தீர்வுக்காய் குரல் கொடுத்த கடல் கடந்த குரல் ஒன்று மௌனித்து விட்டது-கிழக்கு முதலமைச்சர்

இந்திய  அரசியல் தளத்தில் இந்திரா காந்திக்குப் பின்னர் ஆளுமை மிக்க  பெண் தலைவியாக பரிணமித்து  தமிழக மக்களின் மனதில் தனியிடம் பிடித்துள்ள மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயல்லிதா ஜெயராமின் இழப்பு  முழு தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.

செல்வி ஜெயல்லிதா  தமது   அதிகாரத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல்  மக்கள்  நலனுக்காக  இரும்புப்பெண்ணாக இருந்து   பல்வேறு  சவால்களை வெற்றிகொண்டு  பல பெண்கள் அரசியலில் நுழைவதற்கு  முன்னுதாரணமாக திகழ்நதார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அவர் மீது  தாக்குதல் நடத்தப்பட்டபோதும்,சிறையில் அடைத்தபோதும் அடுக்கடுக்காய் வழக்குகள்தொடர்ந்த  போதும் தனிப்   பெண்ணாக இருந்து  அத்தனையையும்  எதிர்கொண்ட தைரியம்  தமிழக  அரசியலின் சரித்திர   நாயகியாக  மறைந்த  முதல்வர் ஜெயல்லிதாவை  பறை சாற்றி நிற்கின்றது.

இலங்கையின்  சிறுபான்மை  மக்களுக்கு  பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகள்  வந்தபோது   அவர்களுக்கு ஆதரவாக  குரல் கொடுத்த்தோடு மட்டுமல்லாமல்  யுத்த்த்தால்   பாதிக்கப்பட்டு  பலர் தமிழகம்  சென்ற போது   அவர்களுக்கு   நேசக் கரம்  நீட்டி தஞ்சமளித்த  நன்றியை   இலங்கைத்  தமிழர்கள் இன்றும்நெஞ்சில் சுமந்தவர்களாகவே உள்ளனர்.

இலங்கையில்  போர்  உக்கிரமடைந்திருந்த  காலகட்டத்தில்  மக்கள் மடிவதைக்  கண்ட  அவர்  யுத்த்ம்  உடனடியாக  நிறுத்தப்பட வேண்டும் என  பல  தடவைகள்  பகிரங்கமாக குரல் எழுப்பியிருந்தார்  என்பதையும்  சுட்டிக்காட்டியாகவேண்டும்.

இது வரை   ஐந்து   தடவைகள்  தமிழகத்தின்   முதலமைச்சர் அரியணையை  அலங்கரித்த செல்வி ஜெயல்லிதா  இலங்கையில் சிறுபான்மையினருக்கு  நியாயமான  தீர்வொன்று கிடைக்க வேண்டும்  என பல  தடவைகள் வலியுறுத்தியிருந்துடன்   இந்திய மத்திய  அரசுக்கு  அழுத்தங்களை பிர யோகத்திருந்தமையும் மறுக்க முடியாது.


ஆகவே  மறைந்த    தமிழக  முதல்வர்    ஜெயல்லிதாவின்  இழப்பு தமிழக  மக்களுக்கு  மாத்திரமன்றி  இலங்கை சிறுபான்மையினருக்கும்   ஈடு செய்ய முடியாத  இழப்பாக   அமைந்துள்ளது  என்பதை   கூறியாகவேண்டும்.

தற்போது  சோகத்தில்  ஆழ்ந்துள்ள   தமிழக  மக்களின்  துயரில்   இலங்கை  சிறுபான்மை   மக்களும்  பங்கேற்றுள்ளனர் என்ற செய்தியை   தமிழக  மக்களுடன்  பகிர்ந்து கொள்கின்றேன்.
                                      கிழக்கு மாகாண முதலமைச்சர்
                                                ஹாபிஸ் நசீர் அஹமட்