நீதியை அவமதிபோர் எவராயினும் அவரைக் கைது செய்யலாம் !!!
நீதிமன்ற உத்தரவினை அவமதிக்கும் வகையலான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும், அவர்களைக் கைது செய்யலாம் என நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு கருத்து வெளியிடுகையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனால் அங்கு கலவரம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தினால், விகாரையையும் அங்கு வருகை தந்த பிக்குமார்களையும் பிரதேசவாசிகளையும் பாதுகாக்கும் நோக்கத்திலேயே பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் எனினும், அங்குள்ள பாதையை மூடுமாறு கோரி நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்படவில்லை ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்த அவர்,
எனினும் நீதிமன்ற உத்தரவைக் பிக்கு கிழித்தெறிந்தமையானது, சரியானதொரு விடயம் என்று கருத முடியாதெனவும் இவ்வாறு நீதிமன்றத்தின் தடையுத்தரவை கிழித்தெறிந்து நீதியை அவமதித்த பிக்குவை கைதுசெய்வதை தவிர வேறெதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துளமை குறிப்பிடத்தக்கது.



