Breaking News

போலி FB கணக்கின் மூலம் 2.7 லட்சம் நண்பர்கள் கொண்டிருந்த அம்புஜா !!

குறித்த கணக்கினை முடிக்கிய பிறகு தான் அம்புஜா அக்கவுன்ட்டை தெரியாதவர்கள் கூட தேடி வருகின்றனர். கிட்டத்தட்ட இப்போது வரை 81 ஆயிரம் பேர் தேடியுள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் ஊடகம் ஒன்றில் பணிபுரியும் பெண்ணாக உதயம் ஆனது அம்புஜா அக்கவுன்ட். இவர் தென்காசியை சேர்ந்தவர் என்ற குறிப்புடன் இந்த போலி அக்கவுண்டை ஆரம்பித்துள்ளார்.

அம்புஜா போலி அக்கவுன்ட்டாக இருப்பினும் நிறைய சமூக அக்கறை கொண்ட பதிவுகளை பதிவு செய்திருக்கிறார். இவரது ஃபாலோவர்களில் 90% மேலானவர்கள் ஆண்களே.

போலி என்ற சந்தேகங்கள் எழ, இவரது கணவர் ரகுவரன் என்ற பெயரில் மற்றுமொரு போலி அக்கவுன்ட் துவக்கப்பட்டுள்ளது. ஒரு நிஜமான குடும்பத்தை போலவே குழந்தை படம் எல்லாம் பதிவு செய்து நம்ப வைத்திருக்கிறார் அம்புஜா.

இவர் மீது சந்தேகப்பட்ட ஊடகவியலாளர் ஒருவர். அம்புஜா பணிபுரிவதாக கூறப்பட்டிருந்த ஊடகத்திற்கு கால் செய்து விசாரிக்க அம்புஜம் போலி என்பது தெரியவந்தது.

இந்த போலி அக்கவுன்ட்டை நடத்தி வந்தவரும் ஒரு ஊடகவியலாளர் தானாம். பெண் பெயரில் அக்கவுன்ட் இருந்தால் தான் நல்ல ரீச் கிடைக்கிறது என அவர் இந்த அக்கவுன்ட்டை யூஸ் செய்து வந்துள்ளார்.

அம்புஜா ஃபேக் ஐடி பயன்படுத்தி வந்த அந்த பெண் புகைப்படம் வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.