Breaking News

ரூ. 25,000 அபராதம் தொடர்பில் நீங்களும் யோசனைகளை முன்வைக்கலாம் !

குறிப்பிட்ட சில போக்குவரத்து விதிகள் மீறல்களுக்கான அபராதத் தொகையான ரூ 25,000 தொடர்பில் திருத்த செய்வது தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்கும்படி சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம், போக்குவரத்து அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. 

குறித்த கருத்துக்களை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னரராக எழுத்து மூலமாக செயலாளர், போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் சேவை அமைச்சு, ஏழாவது மாடி, செத்சிறிபாய இரண்டாவது கட்டம், பத்தரமுல்ல என்ற முகவரிக்கு வழங்குமாறு அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.