Breaking News

வினைத்திறன் கண்காட்சி-காத்தான்குடியில் -படங்கள்.!!

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் மட்டக்களப்பு பாலர் பாடசாலை கல்விப் பணியகம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஊடாக நடைமுறைப்படுத்தும் 2016 வினைத்திறன் கண்காட்சி 28-12-2016 இன்று புதன்கிழமை  காத்தான்குடி அந்-நாஸர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான வெளிக்கள உத்தியோகத்தர் மாஹிர் முஹம்மட் இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி வினைத்திறன் கண்காட்சியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இவ் வினைத்திறன் கண்காட்சி அங்குரார்பண நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சட்டத்தரணி கே.சித்திரவேல்,வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாபா. கே.எம்.ஜெமினுன்னிஸா , காத்தான்குடி அந்-நாஸர் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அல்லாபிச்சை உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்பாடல் திறன் விருத்தி, தனிநபர் சமூக அபிவிருத்தி, அழகியற்கலை விருத்தி, உடல்சார் தேர்ச்சி உட்பட இன்னும் பல விடயதானங்களைத் தொனிப்பொருளாகக் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த வினைத்திறன் கண்காட்சியில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாலர் பாடசாலை சிறார்களின் ஆக்கத் திறன்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)