69 குடும்மபங்களுக்கு காணிகள் இன்று கையளிப்பு !!!
இதுவரைக்கும் கண்ணிவெடி அகழ்வு நிறைவடைந்துள்ள கிளிநொச்சியின் இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் ஒரு தோகைக்காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று(02) இடம்பெற்றது.
கடந்த 2000ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னராகவும் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது இதில் இந்திராபுரம் பிரதேசத்தில் 14 குடும்பங்களின் 25 ஏக்கர் காணியும், முகமாலைபகுதியில் 55 குடும்பங்களுக்கான 1,800 ஏக்கர் காணியும் மீளவளங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.