மட்டக்களப்பு வாவியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு !!!
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரான பா.சிவதாசன்(47) எனும் உத்தியோகத்தர் கடந்த 26ம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 16ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், குறித்த நபர் நேற்று(02) இரவு 10 மணி தொடக்கம் காணாமல் போயுள்ள நிலையில் இவரது சடலம் மட்டக்களப்பு முகத்துவாரப் பகுதியில் வாவியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.