மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடலம் இன்று பிற்பகல் 4.30 அளவில் நல்லடக்கம் !!!
கடந்த இரண்டரை மாதங்களாக இந்தியாவில் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் இருதய செயலிழப்பு காரணமாக தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சசை பலனின்றி அவரின் உயிர் நேற்று நள்ளிரவு 11.30 பிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அப்போல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெயலலிதாவின் உடல் அங்கு மத சம்பிரதாயங்களை முடித்த பின் இன்று அதிகாலை அண்ணா சாலையில் இருக்கும் ராஜாஜி அரங்குக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.





