Breaking News

ஆன்லைன் பாஸ்வேர்டுகளை பாதுகாக்க சில இலகுவான டிப்ஸ் !!

வெவ்வேறு பாஸ்வேர்டு

ஒவ்வொரு ஆன்லைன் சேவைகளுக்கும் தனித்தனி பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் ஹேக்கர் உங்களின் ஏதேனும் ஆன்லைன் சேவையை இயக்க நேர்ந்தாலும் மற்ற சேவைகளை இயக்க முடியாமல் போகும். 

பெரிய பாஸ்வேர்டு

எந்த சேவையென்றாலும் உங்களின் பாஸ்வேர்டின் எண்ணி்க்கை பெரியதாக இருந்தால், அதனை ஹேக் செய்வது கடினமாகி விடும். பொதுவாக எழுத்துக்கள், எண் மற்றும் சிறப்பு குறியீடு உள்ளிட்டவற்றை கொண்ட பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு செய்யும்போது உங்களின் பாஸ்வேர்டு கடினமானதாகி விடும்.

பாஸ்வேர்டுகளை மாற்றுதல்

அடிக்கடி உங்களின் பாஸ்வேர்டுகளை மாற்றுவது நல்லது. இவ்வாறு செய்யும்போது உங்களின் பாஸ்வேர்டினை ஹேக் செய்வது கடினமாகிவிடும். ஒவ்வொரு முறை பாஸ்வேர்டுகளை மாற்றும் போதும் அவற்றை நினைவில் கொள்ள அதனினை குறித்து வைத்து கொள்ளலாம். 

நோட்டிபிகேஷன்

அனைத்து ஆன்லைன் சேவைகளிலும் அக்கவுண்ட் கீ, ஆப்ஷனை செயல்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு ஒவ்வொரு முறை லாக் இன் செய்யும்போதும் நோட்டிபிகேஷன் வந்து விடும்.