Breaking News

எச்சிலை வைத்து மரணத்தை கண்டுபிடிப்பது எப்படி?

லண்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் பிலிப்ஸ் என்ற ஆய்வாளர் நமது உடம்பில் உள்ள இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, ஒருவரின் எச்சிலில் இருக்கும் ஆன்டி- பாடி எண்ணிக்கையானது, மரண விகித்தத்தோடு ஒத்துப் போவது தெரியவந்தது.

நமது உடம்பின் வெள்ளை ரத்த அணுக்களில் சுரக்கப்படும் புரதங்கள், இம்யூனோக்ளோபுலின் அல்லது ஆன்டி-பாடீஸ் போன்ற தொற்று நோய்களை எதிர்த்து போராடும் தன்மை வாய்ந்தது.

நம்முடைய வயது, பாரம்பரியம், உடல்நலக் குறைபாடுகள், மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மதுப் பழக்கம், புகை போன்ற காரணங்களினால் தான் நமது உடம்பில் உள்ள இம்யூனோக்ளோபுலின் மற்றும் ஆன்டி-பாடீஸ் ஆகியவற்றின் சதவீதம் குறைகிறது.

நுரையீரல் தவிர்த்து மற்ற வகை புற்றுநோயினால் ஏற்படும் மரணங்களை அவர்களின் எச்சிலை வைத்து அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.