Breaking News

மட்டக்களப்பு கொக்குவில் கிராம சேவை பிரிவில் 18 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(லியோன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்  நாட்டின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க  பணிப்புரையின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி  அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவின் பங்களிப்புடன் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலின் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  “செமட்ட செவன”  (யாவருக்கும் நிழல் ) தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின்  கீழ் நாடளாவியல் ரீதியில்  வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


மட்டக்களப்பு மாவட்டத்தில்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டத்தின் மாவட்டத்தில் உள்ள அனைத்து  பிரதேச செயலக  பிரிவுகளில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் பயனாளிகளின் பங்களிப்புடன் வீடுகள்  நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கொக்குவில் கிராம சேவை பிரிவில் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட  18  வீடுகளுக்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்கிழமை 02.01.2017  நடைபெற்றது .

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா .ஸ்ரீநேசன் ,எஸ் .வியாலேந்திரன் ,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன் ,பிரதேச செயலாளர் வி .தவராஜா ஆகியோர் கலந்துகொண்டு வீட்டுக்கான அடிக்கலை நாட்டி வைத்தனர் .

இந்நிகழ்வில் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .