Breaking News

என்ன பண்ணாலும் கொண்டையை மறைக்க முடியத ஆவேசத்தில் அட்லீ !

என்ன பண்ணாலும் கொண்டையை மறைக்க முடியத ஆவேசத்தில் அட்லீ !

பைரவா வெற்றியா?தோல்வியா? என்று பார்ப்பதற்கு முன்னே, விஜய் தன் அடுத்த படத்தை இயக்குனர் அட்லீயுடன் தொடங்கிவிட்டார். அட்லீ எப்படி படம் எடுப்பாருன்னு ஊருக்கே தெரியும். மௌனராகத்தை ராஜா ராணியாக்குவார், சத்திரியனை தெறி ஆக்குவார்.

இப்படி ரீமேக் கிங் அட்லீ, விஜய் படம் எந்த கதையில் இருந்து எடுப்பார் என்று சொல்லப்படாத விவாதம் கோலிவுட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு சிலர், கமல் நடித்த வெற்றி விழா என்கிறார்கள். ஒரு சிலர் ப்ளாஷ் பேக் மட்டும் ரஜினி நடித்த அண்ணாமலை படத்தின் ஜிஸ்ட்,1980களில் நடப்பது போல என்கிறார்கள்.

ஆனால், இதனை படக்குழு ஆவேசமாக மறுத்துள்ளது.ஆனால், ஜி நீங்க ரீமேக் தானே பண்ணுவீங்க. என்ன பண்ணாலும் கொண்டையை மறைக்க முடியாதே?! என்று கமெண்டுகளும்  வந்துள்ளதாம்.