Breaking News

குழந்தைகளை தலைக்கு மேல் தூக்காதீர்கள் !!!

குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கி போட்டு, கொஞ்சும் பொழுது, குழந்தை ஆசையாக சிரிக்கும். நமக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், சில சந்தர்ப்பங்களில் மூளை உரசல் ஏற்பட்டு உயிரே பறிபோக வாய்ப்புள்ளது. இது ஷேக்கிங் ஹெட் இன்ஜுரி என்று கூறப்படுகின்றது.

குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆபத்து இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. குழந்தையை தலைக்கு மேலே தூக்கி போட்டு பிடிக்கும் போது, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் குழந்தையின் தலைக்குள் மூளை கடுமையாக பாதிக்கப்படுகின்றது.

இது உடனடியாக வெளியில் தெரிவதில்லை. சிறிது நேரம் கழித்து குழந்தை அழும். பின்பு தூங்கும். அவ்வளவு தான். அதன்பின்பு, மறுபடியும் விழிக்காது. அதனால், குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. பேராபத்தை உண்டாக்கும் என்பதை உணருங்கள்.