Breaking News

ஆங்கில கால்வாயை கடக்கும் ரஷ்ய விமானம் தாங்கி கப்பல் கழுகு கண்களுடன் இங்கிலாந்து!!!

ரஷ்யாவின் விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஏனைய கப்பல்கள் ஆங்கிலக் கால்வாயை கடந்து செல்லவுள்ளன. இதனை உன்னிப்பாக கவனித்து வருவதாக இங்கிலாந்து கூறி உள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷர் அல்-ஆசாத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது.ரஷ்யாவுக்கு சொந்தமான விமான தாங்கி போர் கப்பல் மற்றும் ஏனைய கப்பல்கள் சிரியா பகுதியில் இதற்காக முகாமிட்டு இருந்தன.

ஆனால் ரஷ்யாவின் தாக்குதல்களால் சிரிய மக்களே பெரிய வேதனைகளை அனுபவித்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது அட்மிரல் குஸ்தோவ் என்ற ரஷயா விமான தாங்கி போர் கப்பல் உள்ளிட்ட ஏனைய கப்பல்கள் சிரியாவில் இருந்து ரஷ்யாவை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்துள்ளன.

ரஷ்யாவின் அட்மிரல் குஸ்தோவ் விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஏனைய கப்பல்கள் ஆங்கிலக் கால்வாயை கடந்து செல்லவுள்ளன.

இந்நிலையில் குறித்த கப்பல்கள் இங்கிலாந்து கடற்பரப்பை நெருங்கும் போது அதனைச் சந்திக்கும் வகையில் இங்கிலாந்து போர்க்கப்பல் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்து இங்கிலாந்தின்  பாதுகாப்புச் செயலாளர் சர் மைக்கல் பெல்லோன் கூறும் போது, "அட்மிரல் குஸ்தோவ்" ரஷ்யாவுக்கு திரும்பும் வழியில் நாம் அதனை உன்னிப்பாக  கவனித்து வருகிறோம்.

இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பிரித்தானியாவின் போர் கப்பல் மற்றும் மூன்று போர் விமானங்கள் பயன்படுத்தப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளன. ரஷ்ய போர் கப்பல்கள் அதன் பயணத்தில் பின்தொடர்ந்து வழியனுப்பப்படும் என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.