Breaking News

பெற்றோரை இழந்த வலது குறைந்த மற்றும் தமிழ் -முஸ்லிம் மாணவர்களுக்கான வருடாந்த புத்தகப் பை வழங்கும் நிகழ்வு-படங்கள் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் 38வது சமூகத்தை நோக்கிய பயணத்தில் பெற்றோரை இழந்த வலது குறைந்த மற்றும் தமிழ் -முஸ்லிம் மாணவர்களுக்கான வருடாந்த புத்தகப் பை வழங்கும் நிகழ்வு கடந்த 01 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரை மெரினா வலிமா மண்டபத்தில் இடம்பெற்றது.

சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் இடம்பெற்ற மேற்படி புத்தகப் பை வழங்கும் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,நல்லாட்சிக்காண தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகளினால் பெற்றோரை இழந்த வலது குறைந்த மற்றும் தமிழ் -முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப் பைகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜம் இய்யதுல் உலமா செயலாளர் எம்.சீ.எம். றிஸ்வான் மதனி ,காத்தான்குடி நகர சபை செயலாளர் எஸ்.எம்.எம்.சபி, காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏமு;.கோமலேஸ்வரன் மற்றும் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பிரதிநிதிகள், உலமாக்கள் ,பள்ளிவாயல்களின் தலைவர்கள், பொது நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு சமூகத்தில் நலிவுற்ற மக்களுக்காக தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான  சமூக மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருவதுடன் கடந்த ஆறு வருடங்களில் இடம் பெறும் 38வது உதவி வழங்கும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)